தமிழக ஆளுநர் பர்னாலா நாளை வீடு திரும்புகிறார்!
நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நாளை வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது நலமாக உள்ளார். இதனால் நாளை அவர் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.