1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

சிதம்பரம் கோயில் பிரச்சனை: சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

வேலு‌ச்சா‌‌மி

சிதம்பரம் நடராஜர் கோவில் தேவாரம் சட்டக்கல்லூரி சேலம் மாணவர்கள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாட அனுமதிக்க வேண்டும் என்று கோரி தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் திடீர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் ஏற்காடு மெயின் ரோட்டில் தனியார் சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் திடீர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும். சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை கைது செய்ய வேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்க வேண்டும். சிதம்பரத்தில் கைது செய்யப்பட்ட வழ‌க்க‌றிஞ‌ர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.
About Writer
Webdunia