1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கேரளாவிற்கு கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கேரளா ரேஷன் அரிசி கடத்தல்
கேரளாவிற்கு கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசியை கரூர் அருகே வருவாய் துறை அதிகாரிகள் நேற்று இரவு பறிமுதல் செய்தனர்!

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது அவ்வப்பபோது நடந்துவரும் நிலையில், இதனைத் தடுக்க வருவாய் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கரூர் வட்ட வழங்கல் அதிகாரி மூர்த்தி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது தஞ்சாவூரில் இருந்து கேரளாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட 16 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த அரிசியைக் கடத்தி வந்த லாரியின் டிரைவர், கிளீனரை கைது செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
About Writer
Webdunia