சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளும் அக்டோபர் 1ஆம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பதை சட்ட விரோதம் என்று அறிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க வழக்கு தாக்கல் செய்தது. அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ள அக்டோபர் 1 ந் தேதி...