1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

ஹோபர்ட் டென்னிஸ் : காலிறுதியில் சானியா தோற்றார்!

ஹோபர்ட் டென்னிஸ் சானியா மிர்சா ஆஸ்ட்ரேலிய ஓபன்
ஆஸ்ட்ரேலியா ஹோபர்ட் நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா காலிறுதியில் தோல்வியடைந்தார்!

இத்தாலிய வீராங்கனை ஃபிலாவியா பென்னெட்டா 7-5, 1-6, 6-3 என்ற செட்கள் கணக்கில் சானியாவை தோற்கடித்தார்.

இன்றைய போட்டியில் ஃபிலாவியாவின் 12 பிரேக் பாய்ண்ட் வாய்ப்புகளில் ஏழை சானியா தவறவிட்டதால் ஆட்டத்தின் போக்கு மாறியது.

இப்போட்டி ரசிகர்கள் பார்க்கத்தக்கதாக இல்லையென்று கூறிய ஃபிலாவியா பென்னெட்டா, சானியாவின் தவறே தனக்கு வெற்றியைத் தந்ததாகக் கூறினார்.

ஆஸ்ட்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் 14 ஆம் தேதி துவங்கும் ஆஸ்ட்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பயிற்சிக் களமாக ஹோபர்ட் டென்னிஸ் போட்டி இருந்தது.
About Writer
Webdunia