1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

ஹ‌ர்ப‌‌ஜ‌‌ன் ‌சி‌ங்கு‌க்கு தடை எ‌திரொல‌ி: இ‌ந்‌திய ‌வீர‌ர்க‌‌ள் கே‌‌ன்பரா செ‌ல்ல மறு‌ப்பு!

ஆ‌‌ஸ்‌ட்ரே‌லிய ‌வீர‌ர் சைம‌ன்‌ட்‌‌ஸ் ஹர்பஜன் சிங் சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்திய அணி வீரர்க‌ள் கேன்பரா
ஆ‌‌ஸ்‌ட்ரே‌லிய ‌வீர‌ர் சைம‌ன்‌ட்ஸை இனவெறியுடன் திட்டியதாக கூ‌றி ஹர்பஜன் சிங்கு‌க்கு 3 டெ‌ஸ்‌ட் போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்ததைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்க‌ள் கேன்பரா பயணம் தாமதமாகியுள்ளது.

ஹர்பஜன் சிங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்த ஆணையின் நகல் கிடைக்கவில்லை என்பதால், அது கிடைத்த பிறகே தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியும் என்பதால் அதை எதிர்பார்த்து இந்திய அணி காத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் ஆஸ்‌ட்ரேலிய வீரர் பிராட் ஹாக் மீது இந்தியா கொடுத்துள்ள புகார் குறித்து இன்று விசாரணை நடைபெறவிருப்பதாலும் இந்திய அணியின் பயணம் தாமதமாகியுள்ளது.

இதனிடையே ஹர்பஜன் சிங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் இன்று காலை மும்பையில் உள்ள பிசிசிஐ தலைவர் சரத்பவார் வீட்டில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.

ஆஸ்‌‌ட்ரேலியாவில் இந்திய அணியின் சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு வீரர்கள் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் அது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது கு‌றி‌த்து சே‌ட்ட‌ன் ச‌‌‌வ்கா‌ன் கூறுகை‌யி‌ல், தேவை‌யி‌ல்லாம‌ல் ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் ப‌லிகடா ஆ‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளா‌ர் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
இ‌ந்‌‌திய ‌கி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய‌த்‌தி‌ன் மு‌ன்னா‌ள் தலைவ‌ர் ஜ‌‌க்மோக‌ன் டா‌ல்‌மியா கூறுகை‌யி‌ல், இ‌ந்‌தியா ‌விளையாடு‌ம் போ‌ட்டிக‌ளி‌ல் ப‌‌க்ன‌ர் நடுவராக இரு‌க்க‌க் கூடாது எ‌‌ன்று கூ‌றினா‌ர்.

இ‌து தொட‌ர்பாக ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி‌த் தலைவ‌ர்‌ பா‌ன்டி‌ங் கூறுகை‌யி‌ல், நா‌‌ங்க‌ள் ‌பிர‌ச்சனை ப‌ண்ண‌வி‌ல்லை. ஒரு‌ங்காக‌த்தா‌ன் ‌விளையாடி‌க் கொ‌ண்டு இரு‌க்‌கிறோ‌‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.