1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

ஊ‌க்க மரு‌ந்து: கே‌ட்‌லினு‌க்கு 4 ஆ‌ண்டு தடை!

ஊ‌க்க மரு‌ந்து ஒலிம்பிக் அமெ‌ரி‌க்க ‌வீர‌ர் ஜஸ்டின் தடை
ஊ‌க்க மரு‌ந்து சா‌ப்‌பி‌ட்டு ஒலிம்பிக் போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்றதாக ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரியவ‌ந்ததா‌ல் அமெ‌ரி‌க்க ‌வீர‌ர் ஜஸ்டின் கேட்லினுக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் மீது ஊக்க மருந்து புகார் கூறப்பட்டது. 2006 ஆம் ஆண்டு அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தான டெஸ்டஸ்டோனை பயன் படுத்தியதாக புகார் கூறப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் அவருக்கு 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அமெரிக்க நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக கேட்லின், 2010ஆ‌ம் ஆண்டு வரை போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் போட்டியில் வெற்றி பெற்ற கேட்லின், தோஹாவில் 9.77 நொடியில் ஓடி உலக சாதனை படைத்தார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.