1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

‌திரா‌வி‌ட் ஏமா‌ற்ற‌ம்!

பாகிஸ்தானுக்கு எதிரான  3
பாகிஸ்தானுக்கு எதிரான 3, 4வது ஒருநாள் போட்டிக்கான அணியிலும் இடம் பெறாதது தனக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ராகு‌ல் திராவிட் கூறியுள்ளார்.

பா‌கி‌ஸ்தா‌ன் அ‌ணி‌க்கு எ‌திரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்ட ராகு‌‌‌ல் திராவிட், சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்தார்.

தனது திறமை நிரூபிக்கப்பட்டதால் மீண்டும் அணியில் இடம் பெறக் கூடுமென்ற நம்பிக்கையுடன் திராவிட் இருந்தார். ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்ற அணியே 3, 4வது போட்டியிலும் இடம் பெறும் என்று தேர்வுக்குழு நேற்று அறிவித்தது.

இதனால் மீண்டும் அணியில் இடம் பெறாதது திராவிட்டுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும் இம்மாதம் 18ஆ‌ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் 5வது போட்டியில் அவர் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

வரும் 11ஆ‌ம் தே‌தி கான்பூரில் 3வது ஒருநாள் போட்டியும், நவம்பர் 15ஆ‌ம் தேதி குவாலியரில் 4வது ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளன.