கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்கு 239 பேரோடு கடந்த மார்ச் 8 ஆம் தேதி புறப்பட்ட மலேஷிய விமானம் மாயமானது. காணாமல் போன அந்த விமானம் கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பயணிகள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று மலேஷியா அறிவித்தது. இதற்கு சீன மக்களிடையெ கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.