புது டெல்லி : தனது வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை அமெரிக்க அரசிற்குத் தருவதாக சுவிஸ் வங்கிகளில் ஒன்று ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதை அடுத்து, இந்திய வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை மத்திய ஐ.மு.கூ. அரசு கேட்டுப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.