கொல்லம் : மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் பாகிஸ்தான் மண்ணில்தான் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இதுகுறித்து இந்தியா கொடுத்துள்ள ஆதாரங்களுக்கான பாகிஸ்தானின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.