மும்பை: பல கோடி ரூபாய் அளவில் நடந்த போலி முத்திரைத்தாள் மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட அப்துல் கரீம் தெல்கிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மும்பையில் உள்ள சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.