புது டெல்லி : பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதி பிரச்சனைகளுடன் காஷ்மீர் விவகாரத்தை சம்பந்தப்படுத்துவதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் இந்தியா கடுமையாக எதிர்க்கிறது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு தேசப் பாதுகாப்புச் செயலர் எம்.கே. நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.