மும்பை : சர்வதேச நாடுகளுடன் சமூகப் பயன்பாட்டிற்கான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியப் படிகளில் ஒன்றாக, சர்வதேச அணு சக்தி முகமையுடன் முக்கியக் கண்காணிப்பு ஒப்பந்தம் ஒன்றில் பிப்ரவரி 2ஆம் தேதி இந்தியா கையெழுத்திடுகிறது.