கொழும்பு : இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்து வரும் போரில் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து சிறிலங்க அதிபரிடம் கவலை தெரிவித்துள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அவர்களின் பாதுகாப்பை சிறிலங்க அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.