புது டெல்லி : இந்தியா வந்திருந்த இங்கிலாந்து அயலுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட், பயங்கரவாதத்துடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து கூறிய கருத்துக்கள் தங்களுக்கு ஏற்புடையது அல்ல என்ற விவரத்தை முறையாக ராஜ்யரீதியான வழிகளில் இங்கிலாந்திற்குத் தெரிவித்து விட்டோம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.