புது டெல்லி : நமது நாட்டில் (மும்பை) தாக்குதல் நடத்தியுள்ள குற்றவாளிகளை இந்தியச் சட்டப்படிதான் தண்டிக்க வேண்டும். எனவே அவர்களை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.