1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

''நாட்டின் நிலைத்தன்மையை பயங்கரவாத சக்திகள் பாதிக்க அனுமதிக்க மாட்டோம்''

பயங்கரவாதம் சென்னை அயல்நாடு வாழ் இந்தியர்கள் மாநாடு பிரதமர் மன்மோகன் சிங்
பயங்கரவாத, தீவிரவாத சக்திகள் நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைத்தன்மையை பாதிக்க அனுமதிக்கக் மா‌ட்டோ‌ம் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று அயல்நாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா வெற்றி பெறுவதைக் காண இங்குள்ள பல‌ர் இருக்க மாட்டார்கள். ஆனால், பயங்கரவாதமும், தீவிரவாதமும் நாட்டின் நிலைத்தன்மையை பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை பலமுறை உணர்த்தி வந்துள்ளோம் என்று கூறினார்.

தேசிய பாதுகாப்பு, நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அதே தருணத்தில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடம் எனக் கருதப்படும் பகுதிகளை, பயங்கரவாதிகளை தோற்றுவிக்கும் இடங்களை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் அழிக்கும் பணியையும் இந்தியா மேற்கொள்ளும் என பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருந்தாலும், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளதால், 2009ஆம் ஆண்டிலும் 7 விழுக்காடு வளர்ச்சியை தேசம் எட்டும் என்று குறிப்பிட்ட அவர், உலக அளவில் இது மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாக இருக்கும் என்றார்.

இந்தியாவின் வளர்ச்சியில் பெரும்பங்கு உள்நாட்டு பங்களிப்பு என்பதால், இனி வரும் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சி சிறப்பான உயர்வை எட்டும் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.
About Writer
Webdunia