கவுகாத்தி : அசாம் மாநிலம் அங்லோங் மாவட்டத்தில் பழங்குடியின தீவிரவாதிகள் இன்று அதிகாலை ரயில் தண்டவாளத்தை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். டெல்லியில் இருந்து வந்த ராஜ்தானி விரைவு ரயில், குண்டு வெடிப்பிற்கு 2 நிமிடங்கள் பின்னர் அந்த வழியாக வந்ததால் குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.