புதுடெல்லி : இந்தியாவின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவாவில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, மத்தியக் கூடுதல் காவல் படையினர் மற்றும் விரைவு அதிரடிப்படையினர் 375 பேரை மத்திய அரசு கோவாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.