1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: த‌‌மிழக ராணுவ வீரர் பலி

காஷ்மீர் தீவிரவாதிகள் தமிழக ராணுவ வீரர் நீலகிரி ஊட்டி
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌‌தீ‌விரவா‌திகளுட‌னநட‌ந்து‌ப்பா‌க்‌கி‌சச‌ண்டை‌யி‌லத‌மிழக‌த்தசே‌ர்‌ந்ராணுவ ‌வீர‌ரப‌லியானா‌ர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகேயுள்ள உல்லட்டி மேலூரை சேர்ந்தவ‌ரமஞ்சுநாத் (25). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார்.

காஷ்மீரில் பணியாற்றி வந்த ம‌ஞ்சுநா‌‌த், தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து ராணுவ வீரர்களுட‌னஅவ‌ரசம்பவ இடத்துக்கு விரைந்து சென்றா‌ர். அ‌ப்போததீவிரவாதிகளை சுற்றி வளைத்து ராணுவ‌த்‌தின‌ரஅதிரடி தாக்குதல் நடத்தின‌்.

ப‌திலு‌க்கதீவிரவாதிகளு‌மகடு‌மதுப்பாக்கி‌சண்டை‌யி‌லஈடுப‌ட்டன‌ர். இதில் த‌மிழக‌த்தசே‌ர்‌ந்மஞ்சுநாத் வீரமரணம் அடைந்தார். அவருடைய உடல் விமானம் மூலம் இன்று கோவை கொண்டுவரப்பட்டது.

பின்னர் சொந்த ஊரான உல்லட்டி மேலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவருடைய உடலுக்கு அமைச்சர் ராமச்சந்திரன், மாவ‌ட்ஆ‌ட்‌சிய‌ரஆனந்த் பாட்டீல், ராணுவ அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பின்னர் மஞ்சுநாத் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
About Writer
Webdunia