புது டெல்லி: நமது நாடு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், பயங்கரவாதத்தை முறியடிக்கத் தேசப் புலனாய்வு முகமை ஒன்று அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்ற காலத்தின் தேவையையொட்டியே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டவரைவுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.