புது டெல்லி: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது, இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 'கிரீமி லேயர்' பிரிவினருக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சமாக உயர்த்தப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.