மும்பை : மும்பையில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், அமைதியை வலியுறுத்தியும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்பட 60,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.