புது டெல்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கூட பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளன. ஆனால் அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை மட்டும் அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.