மும்பை: மும்பையை கடந்த 62 மணி நேரமாக தொடர் பீதியில் வைத்திருந்த பயங்கரவாதிகள் அனைவரும் இன்று நண்பகலுக்கு முன்பாக தேசிய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். தாஜ்மஹால் நட்சத்திர விடுதியில் வெடிகுண்டுகள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிய தீவிர தேடுதல் பணி நடந்து வருகிறது.