1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

மும்பை பயங்கரவாத தாக்குதல்: பலி 195 ஆக உயர்வு

மும்பை பயங்கரவாத தாக்குதல் தாஜ்மஹால் நட்சத்திர விடுதி
மும்பையில் உள்ள நட்சத்திர விடுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்புகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது.

பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த தாஜ் மஹால் நட்சத்திர விடுதி இன்று மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு நடத்திய சோதனையில் மேலும் பல சடல‌ங்க‌ள் ‌கிட‌ப்பது தெரியவந்தது.

இதுகு‌றி‌த்து மும்பை பேரிடர் தடுப்பு அலுவலக அதிகாரி சாந்தாராம் யாதவ் கூறுகையில், மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இதுவரை 195 பே‌ர் பலியாகி உள்ளதாகவும், 295 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

தாஜ் மஹால் நட்சத்திர விடுதியில் சுயநினைவின்றிக் தரையில் கிடந்த பலர் தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதனா‌ல் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் சாந்தாராம் கூறினார்.
About Writer
Webdunia