1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

மும்பை சென்றார் எல்.கே.அத்வானி

மும்பை அத்வானி புதுடெல்லி
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு காரணமாக ஏற்பட்ட பாதிப்பை நேரில் பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி இன்று மும்பை சென்றுள்ளார்.

தாக்குதல் நடந்த இடங்களைப் பார்வையிட்ட பின்னர் இன்று மதியம் மும்பையில் உள்ள கட்சி தலைமையகத்தில் உறுப்பினர்களுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அத்வானி விவாதிப்பார் என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு குண்டுவெடிப்பு நடந்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு பேசிய அத்வானி, தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதுடன், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததாக செய்திகள் கூறுகின்றன.
About Writer
Webdunia