புதுடெல்லி : தற்போதுள்ள செல்பேசி சந்தாதாரர்கள் ஒரு தொழில்நுட்பத்தில் இருந்து வேறு ஒரு தொழில்நுட்பத்திற்கு மாற்றிக் கொள்ளும் போதும், ஒரு நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளும் போதும் தங்களது செல்பேசி எண்ணை மாற்றிக் கொள்ளாமல் தக்க வைத்துக் கொள்ளும் தொழில்நுட்பத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய தொலைத் தொடர்புத் துறை வரவேற்றுள்ளது.