புதுடெல்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள், தெலுங்கு தேசம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சார்பில் டிசம்பர் 2ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற உள்ளது.