புது டெல்லி: பயங்கரவாதத்தை ஒடுக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (POTA) போன்ற கடுமையான சட்டங்கள் எதுவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று மறுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் தனித்தனியாக சிறப்புப் படைகளை உருவாக்கிக்கொள்ளுமாறு ஆலோசனை தெரிவித்தார்.