பிரதமரிடம் தகவல் ஒலிபரப்புத் துறை!
குடியரசுத் தலைவர் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பொறுப்பு பிரதமரிடம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி உடல் நலம் தேறி தமது அமைச்சக பணிகளை மேற்கொள்ள இயலும் வரை அந்த பொறுப்பு பிரதமரிடம் இருக்கும்.
அதுவரை பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி இலாகா இல்லாத கேபினட் அமைச்சராக இருப்பார்.
பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி மாரடைப்பினால் அக்டோபர் 13 ஆம் தேதி புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டு, பின்னர் அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.