1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்பு: போடோ தீவிரவாதிகளிடம் விசாரணை!

அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்பு போடோ உரிமையியல் நல்பாரி மாவட்டம்
அஸ்ஸாமில் கடந்த மாதம் 30ஆம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் போடோ தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடைய 7 இளைஞர்களை அம்மாநில காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள இந்த 7 பேரும் குவஹாத்தியில் உள்ள தலைமை உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.

இவர்களை அம்மாநில காவல் துறையினர் நல்பாரி மாவட்டம், தோம்தோமா என்ற இடத்தில் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Webdunia