டெல்லி பல்கலை.யில் ஏ.பி.வி.பி.யினர் ரகளை!
டெல்லி பல்கலைக்கழகத்தில் மதக்கலவரங்கள் தொடர்பாக நடந்த கருத்தரங்கில் இந்துத்துவா மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யினர் வன்முறையில் ஈடுபட்டதுடன், பேராசிரியர் ஒருவரின் முகத்தில் உமிழ்ந்தனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 'வகுப்புவாதம், சர்வாதிகாரம், ஜனநாயகம்: வார்த்தைகளும் எதார்த்தமும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கீலானியும் பங்கேற்றுப் பேசவிருந்தார்.
அப்போது கூட்ட அரங்கிற்குள் அத்துமீறி நுழைந்த ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் நாற்காலிகளையும், மேசைகளையும் உடைத்து பேராசிரியர் கீலானிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் ஒருவர் மேடைக்குச் சென்று பேராசிரியர் கீலானியின் முகத்தில் இரண்டு முறை உமிழ்ந்தார்.
இந்தச் சம்பவம் டெல்லி பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.