புது டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமா பெற்றுள்ள வெற்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு மற்றும் தெற்கு ஆசியா மீதான அமெரிக்கக் கொள்கைகளில் அவர் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.