1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அப்சால் குருவிற்கு கருணை காட்டவில்லை - காங்.

அப்சால் குரு நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கு முருகன் ராஜீவ் கொலைவழக்கு
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சால் குருவிற்கு கருணை ஏதும் காட்டப்படவில்லை என்று காங்கிரஸ் கூறியிருக்கிறது.

இதுதொடர்பாக புதுடெல்லியில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில் அப்சால் குரு தாக்கல் செய்திருக்கும் பொதுமன்னிப்பு மனு மீது இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

ராஜீவ் கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகனின் தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில், அதன் பின்னர் வெளியான தீர்ப்பே அப்சால் குரு மரண தண்டனை என்று அவர் குறிப்பிட்டார்.
About Writer
Webdunia