புதுடெல்லி : பால்தாக்ரேயை சமாதானப்படுத்த ராஜ்தாக்ரே மீது மென்மையான போக்கை மத்திய அரசு கையாள்கிறது என்று குற்றம்சாற்றிய சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங், இதே நிலைமை நீடித்தால் வட இந்திய மக்களுக்காக நாங்கள் எதையும் செய்யத் தயார் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.