புது டெல்லி : இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை உடனடியாக நிறுத்தி போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்றும், இராணுவத் தாக்குதலில் எந்த அளவிற்கு தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிய அனைத்துக் கட்சிக் குழுவை அந்நாட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.