புதுடெல்லி : இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி விட்டதாகக் கூறி, இடதுசாரிக் கட்சிகள் பிரதமருக்கு எதிராக கொண்டு வந்த உரிமை மீறல் தாக்கீதை மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.