பரத்பூர் : ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிவிபத்தில் இடிந்து விழுந்த வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மேலும் 5 பேரின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டது. இதையடுத்து இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.