புல்பானி: ஒரிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 36 பேர் பலியானார்கள். இந்த கலவரம் வெடித்த பகுதிகளில் தற்போது நிலைமை இயல்புக்கு திரும்பியுள்ளதால் 7 வாரமாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது.