புதுடெல்லி: சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் மீதான அடக்கு முறையை இலங்கை அரசு கைவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, இலங்கை நிலவரம் கவலையளிப்பதாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.