புதுடெல்லி: ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் நடைபெற்ற மத வன்முறைகள் அபாயகரமானவை என்று வர்ணித்த பிரதமர் மன்மோகன் சிங், இது போன்ற வன்முறைகள் நம் அடிப்படை பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் கூறினார்.