புதுடெல்லி: ஒரிசா, கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வரும் கலவரம், வன்முறை சம்பவங்கள் அப்பகுதியின் அமைதியைக் குலைப்பதுடன், மிகவும் அபாயகரமானவை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.