புது டெல்லி: மகாத்மா காந்தியின் 139 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தலைநகர் டெல்லி, ராஜ் காட்டில் உள்ள அவரது சமாதிக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.