கேந்திரபாரா: ஒரிசாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி வீட்டை இழந்த கர்ப்பிணி ஒருவர் தண்ணீருக்கு நடுவில் படகில் தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயும் சேயும் நலமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.