புது டெல்லி : குஜராத் கலவரத்திற்கு வித்திட்ட கோத்ரா இரயில் எரிப்பு சதித்திட்டம் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்ட சதிச்செயலே என்று நீதிபதி நானாவதி ஆணையம் அளித்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்றும், அது தற்செயலான நிகழ்வுகளே என்பது 6 மாதங்களாக தாங்கள் நடத்திய புலனாய்வில் வெளிப்படுத்தப்பட்டதாக டெஹல்கா இதழ் குற்றம் சாற்றியுள்ளது.