புவனேஸ்வர்: ஒரிசாவில் வெள்ளத்திற்கு 50 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மகாநதியில் புதிதாக 43 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மேலும் 61 கிராமங்களுக்கு வெள்ளம் பரவியுள்ளது. 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் 5 நாட்களுக்கும் மேலாக வெள்ளத்தின் நடுவில் தத்தளிக்கின்றனர்.