புவனேஸ்வர்: ஒரிசாவில் மதக் கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள கிராமத்தவர் இருவரை விடுதலை செய்ய வேண்டும் என்று போராடிய பழங்குடியினரைக் கலைப்பதற்காக காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.