1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 பே‌ர் ப‌லி!

காஷ்மீரில் கடும் மோதல் 3 பேர் பலி
கா‌ஷ்‌மீ‌ர் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் இருவரு‌ம் படை‌யின‌ர் ஒருவரு‌ம் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

கு‌ப்வாரா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் எ‌ல்லை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க் கோ‌ட்டு‌ப் பகு‌தி‌யி‌ல் சோனா ‌பி‌ண்டி க‌லி எ‌ன்ற இட‌த்‌தி‌ல் ஊடுரு‌விய ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் நமது படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் இ‌ன்று அ‌திகாலை மோத‌ல் வெடி‌த்தது.

இ‌ந்த‌ச் ச‌ண்டை‌யி‌ல் நமது படை ‌வீர‌ர் ஜெக‌ந்நா‌த் ம‌ண்ட‌ல் எ‌ன்பவ‌ர் படுகாயமடை‌ந்து மரு‌த்துவமனை‌க்கு‌க் கொ‌ண்டு செ‌ல்ல‌ப்படு‌ம் வ‌ழி‌யி‌ல் இற‌ந்தா‌ர்.

இதையடு‌த்து அ‌ந்த‌ப் பகு‌தி முழுவது‌ம் சு‌ற்‌றி வளை‌க்க‌ப்ப‌ட்டு நட‌த்த‌ப்ப‌ட்ட தா‌க்குத‌லி‌ல் ‌தீ‌விரவா‌‌திக‌‌‌ள் இருவ‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். தேடுத‌ல் வே‌ட்டை தொட‌ர்‌ந்து நட‌ந்து வரு‌கிறது எ‌ன்று பாதுகா‌ப்பு தர‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளது.